மாஞ்சோலையில் 3ஜி நெட்வொர்க் அமைக்க வனத்துறையிடம் தாெழிலாளர்கள் கோரிக்கை
பள்ளி மாணவ- மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு 3G நெட்வொர்க் வசதி ஏற்படுத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் வனத் துறைக்கு கோரிக்கை.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்க்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி, கோதையாறு பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தொலைதொடர்புக்காக பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக எஸ்டேட் பகுதியில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்பொழுது பி எஸ் என் எல் தொடர்பு மூலம் 2G சேவையே வழங்கப்படுகிறது. இதனால் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள மாணவ- மாணவிகள் கல்வி கற்க முடியாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுகிறார்கள்.
மேலும் அவர்கள் கூறுகையில்:- எங்கள் பகுதிக்கு பிஎஸ்என்எல் 3G தொலைத்தொடர்பு வசதி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். இதனடிப்படையில் எங்கள் பகுதியில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு வசதி அமைக்கும்போது வனத்துறை அதிகாரிகள் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வனத்துறை இயக்குநரிடம் 17.08.2020 அன்று மனு வழங்கினோம், ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள மாணவ- மாணவிகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திற்கு 3G செல்போன் டவர் அமைக்க வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu