அம்பாசமுத்திரத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

அம்பாசமுத்திரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நாகூர்கனி என்பவரின் மகன் சம்சூதீன்(34), கோவில்குளம் பிள்ளையார் கோவில் சன்னதி தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சுப்பிரமணியன் (24) மற்றும் கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜான்ஜோதி என்பவரின் மகன் கிஷோர்(20) ஆகிய மூன்று பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை மற்றும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. உடனடியாக குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வி.கே.புரம் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமிக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!