அம்பாசமுத்திரம் தொகுதி அமமுக வேட்பாளர் ராணி ரஞ்சிதம் தீவிர பிரசாரம்

அம்பாசமுத்திரம் தொகுதி அமமுக வேட்பாளர் ராணி ரஞ்சிதம்  தீவிர பிரசாரம்
X
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பேராசிரியர் ராணி ரஞ்சிதம் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலசமுத்திரத்தில் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அங்குள்ள கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்

அங்கிருந்து திறந்த வேனில் நின்று கொண்டு பிரஞ்சேரி, பத்தமடை, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சென்று டிடிவி தினகரன் அறிவித்துள்ள திட்டங்களை எடுத்து கூறி தனக்கு வாக்குகள் கேட்டு வெற்றி பெற செய்யுமாறு பிரச்சாரம் செய்தார்.

இதில் அமமுக மாவட்ட செயலாளர் குமரேசன் உட்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்