நெல்லை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நெல்லை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X
பத்தமடையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

நெல்லையை அடுத்த பத்தமடையில் பெண்னை அவதூறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

நெல்லை மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (30), இவர் 19 தேதி அன்று பக்கத்து வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன்(36), சீதா லட்சுமியை அவதூறாக பேசி, அருகிலிருந்த கம்பால் முதுகு மற்றும் கையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சீதாலட்சுமி பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜோசப் விசாரணை மேற்கொண்டு சீதாலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நம்பிராஜனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Tags

Next Story
ai as the future