அகஸ்தியர் அருவி - அடைத்து வைத்த அருவியில் தண்ணீர் கொட்டும் மர்மம்.
அகஸ்தியர் அருவி மீண்டும் விரைவில் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது அகஸ்தியர் அருவியில் வனத்துறையினால் தண்ணீர் திறக்கப்பட்டு கொட்டுகிறது.
அகஸ்தியர் அருவி பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம்.
இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு மட்டுமின்றி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம்.
கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ஒரு பெரிய சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும். இதற்கு புராணம் சொல்லும் காரணம், சிவபெருமானின் திருமணத்தை காண வந்த எண்ணிலடங்கா கூட்டத்தினால் ஏற்பட போகும் அசம்பாவிதத்தை தடுக்க, பூமியை சமநிலைப்படுத்த அகஸ்தியர் செய்த அமைப்பு இதுவென்று.
கொரனோ பரவாமல் தடுப்பதற்காக அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் முக்கிய பெரும்புள்ளிகள் சிலர் குளிக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வருவதால் இந்த மாதிரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு சில பணிகள் நடப்பதால் விரைவில் அருவி பொதுமக்களுக்கு திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu