நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதசடங்கின்படி கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.
இரவு சுகாதார ஆய்வாளரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் சேரை சித்தீக் அம்பை தொகுதி செயலாளர் டாடா சேக், அம்பை ஹபீப், டிரைவர் மைதீன்,கல்லிடை தன்சீர் தலைமையிலான தன்னார்வ மீட்புக்குழுவினர், மாநகராட்சி பகுதியில் இறந்த 43 வயது ஆணின் உடலை பெற்று எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் மூலம் கல்லறை தோட்டம் கொண்டு சென்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதசடங்கின்படி கல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்தனர்.
இதனை தொடர்ந்து மூன்றாவதாக, கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52வயது நபர் கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலை 7.30 அளவில் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சேரை இடுகாட்டில் அவரது மதசடங்கின்படி நல்லடக்கம் செய்தனர்.
எஸ்டிபிஐ கட்சி தன்னார்வ குழுவினர் நோன்பு வைத்த நிலையிலும் நோன்பு திறந்த நிலையிலும் மூன்று பேரின் நல்லடக்கத்திற்கு செய்த மனிதநேய பணிகளை உறவினர்கள் அதிகாரிகள் பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu