நல்லநேரம் என்பதால் வேட்புமனு தாக்கல் - நயினார்நாகேந்திரன்
பாரதிய ஜனதா கட்சி சார்பாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அவசரமாக நயினார் நாகேந்திரன், நெல்லை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததால் கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரும் அதிருப்தி அடைந்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணியை முடிவு செய்ததுடன் தொகுதிப் பங்கீட்டையும் முடித்துள்ளனர். பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் தேர்வை முடித்து பெயர்களையும் அறிவித்துவிட்டனர்.இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கட்சி சார்பாக இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை அறிவிக்கப்படவில்லை.ஆனால், பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலரான சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மேலும் வேட்புமனு தாக்கலின் போது சொந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை. தன் இளைய மகன் விஜய் சண்முகநயினாருடன் சென்று மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், நான் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறேன். வேட்பாளர் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பார்கள். பட்டியல் அறிவிப்புக்கு முன் வேட்பு மனுத்தாக்கல் செய்ததற்குக் காரணம், தற்போது நல்ல நேரம் என்று சொன்னதால் அந்த நேரத்தில் எனது மனுவைத் தாக்கல் செய்தேன். அது மட்டுமே நான் வேட்புமனு தாக்கல் செய்யக் காரணம். திருநெல்வேலி தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். இந்தத் தொகுதியில் ஜவுளி பூங்கா உள்ளிட்ட தேவையான திட்டங்களைக் கொண்டுவர முயற்சி எடுப்பேன்.ஏற்கனவே இங்கு எம்எல்ஏ.,வாக பொறுப்பில் இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குச் சேகரிப்பேன். மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதால் வெற்றியைக் கைப்பற்றுவேன்" என்று தெரிவித்தார்.திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, நயினார் நாகேந்திரன் அவசர அவசரமாக மனுத்தாக்கல் செய்திருப்பது நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu