கூட்டணி உறுதி- எஸ்டிபிஐ,அமமுக நிர்வாகிகள் கொண்டாட்டம்

கூட்டணி உறுதி- எஸ்டிபிஐ,அமமுக நிர்வாகிகள் கொண்டாட்டம்
X

விக்கிரமசிங்கபுரத்தில் எஸ்.டி.பி.ஐ-அமமுக கட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டணி அறிவித்த உற்சாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி தலைமை கூட்டணி முடிவை அறிவித்த உடன் செயல்வீரர்கள் உற்சாகத்தில் அமமுக நிர்வாகிகளை சந்தித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி வழக்கறிஞர் முஹம்மது ஷஃபி தலைமையில், விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சி நகர நிர்வாகிகள் அப்துல் அஜீஸ், இஜாஸ் , ஜாகிர் ஹுசைன், செய்யது அலி, நாசர், ஷானவாஸ், ஆகியோர் சென்று அமமுக விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் வழக்கறிஞர்கள் ஸ்டாலின், ஹரி, மற்றும் இதர நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.முன்னதாக எஸ்டிபிஐ கட்சி,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்தி, பாளையங்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு கையெழுத்து இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!