நெற்கதிர்கள் மூலம் வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு

நெற்கதிர்கள் மூலம் வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அம்பாசமுத்திரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் வயலில் வைத்து நெல் அறுவடையில் 100 சதவீதம் என எழுதி வயல்பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதனையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி சைக்கிள் பேரணி , மகளிர் சுய உதவி குழுக்கள் பேரணி , கோலப்போட்டி என பல்வேறு நிகழ்வுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்களை கவரும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் விளையும் பூமியான அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமாக, நெல் அறுவடை நடக்கும் வயலில் நெற்கதிர் செடிகளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் கழுகுபார்வையில் பிரத்தியேக காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அதே வயல் பகுதியில் வைத்து வயலில் வேலை பார்த்த விவசாயிகள் , அப்பகுதி பொதுமக்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் வைத்து வாக்களிப்பது குறித்தும் , 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும் செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவீத வாக்குபதிவு சிறப்பு காட்சிகள் கழுகுப்பார்வையில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் , பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் இது வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags

Next Story