துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு

துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இங்குள்ள தனியார் திருமண மண்டபம் முன்பிருந்து துவங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக வந்து கல்யாணி திரையரங்கம் முன்பு நிறைவு பெற்றது.துப்பாக்கி ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் அணிவகுத்து வந்த அணிவகுப்பிற்கு அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். வாக்குப்பதிவு நாளின் போது வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்ந்த இந்த கொடி அணிவகுப்பினை வழி நெடுகிலும் ஏராளமானோர் கண்டு மரியாதை அளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!