விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்-மாவட்ட நிர்வாகம் தகவல்
திருநெல்வேலி கலெக்டர்
விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்- மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் விடப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் :-
தமிழ்நாடு அரசு வேளாண்மை பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான 2 மண் தள்ளும் இயந்திரங்கள், 8 டிராக்டர்கள், 11 நெல் அறுவடைஇயந்திரங்கள், 2 டயர் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. மேலும், நிலம் சமன் செய்தல், உயர் பாத்தி அமைத்து, விதைத்தல், காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், அறுவடை, பல்வேறு பயிர்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், வாழைத்தண்டை துகளாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல், உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ. 340- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னிரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.660-க்குவிவசாயிகளுக்கும் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
மேலும் நெல் அறுவடைப் பணியை பொறுத்தவரை, ஈரப்பதம் அதிகமாக உள்ளநெல் வயல்களில் அறுவடை செய்ய டிராக் வகை நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.1415-க்கும், வயல் காய்ந்த நிலையில் உள்ள நெல் வயல்களில் அறுவடை செய்ய சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.875-க்கும் வேளாண்மை பொறியியல் துறையால் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
சேரன்மகாதேவி வட்டங்களான சேரன்மகாதேவி, களக்காடு, முக்கூடல் மற்றும் நாங்குநேரி பகுதிகளில் தற்சமயம் கோடை பருவ நெல் அறுவடை நடைபெற்று வருவதால் இந்த பகுதி விவசாய பெருமக்கள், சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான நெல் அறுவடை இயந்திரம் மற்றும் வேளாண்மை இயந்திரங்களை வாடகைக்கு பெற்று பயனடைய தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பள்ளகால்புதுக்குடி, மூலக்கரைப்பட்டி, மூன்றடைப்பு, தோட்டாக்குடி மற்றும் சிங்கிகுளம் பகுதியை சார்ந்த விவசாய பெருமக்கள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), சேரன்மகாதேவி அலைபேசி எண். 9600159870-ஐ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, மேலே குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் உபகோட்ட அலுவலகத்தினை அணுகி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. உதவி செயற்பொறியாளர்(வே.பொ), திருநெல்வேலி அலைபேசி எண். 9952527623
2. உதவி செயற்பொறியாளர்(வே.பொ), சேரன்மகாதேவி அலைபேசி எண். 9600159870
3. செயற்பொறியாளர்(வே.பொ), திருநெல்வேலி அலைபேசி எண். 9443694245
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu