100% வாக்களிக்க சைக்கிள் பேரணி

100% வாக்களிக்க சைக்கிள் பேரணி
X
நெல்லையில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்து அவரும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் அனைவரையும் வாக்களிக்க வைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன்பிருந்து தொடங்கிய சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கிவைத்து, ஆட்சியரும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். சைக்கிள் பேரணியில் சென்றவர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்ற பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன்பு தொடங்கிய இந்த பேரணி முக்கிய சாலைகள் வழியாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் முதல் வாக்காளர்களுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து மாவட்ட ஆட்சியர் செயல்முறை விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து 100 சதவீதம் வாக்கு அளிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்தப் பேரணியில் மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture