/* */

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்

முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள்,ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
X

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்டம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம்!

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்டம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் முகம்மது அலி தலைமையில் பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் பாளை. தொகுதி ஏரியா தலைவர் சேக் தாவுத்,ஏரியா செயலாளர் அபுதாஹிர், எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில துணை தலைவர் மீரான் அன்வாரி உட்பட நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கூறியதாவது:

தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு முன்விடுதலை திட்டத்தை 1994ல் கொண்டு வந்தது. எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்திருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் அவர்களை முன்விடுதலை செய்ய இயலும். அண்ணா பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு, செம்மொழி மாநாடு என பல நிகழ்வுகளில் பத்தாண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகள் தமிழக சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இருப்பினும் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஏழு சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக பல நேர்மறையான நடவடிக்கை எடுத்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், தமிழக சிறைகளில் 47 முஸ்லிம் சிறைவாசிகள் இருபதாண்டுகளுக்கும் அதிகமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விஷயத்தில் மவுனம் காக்கிறது.

சிறைவாசிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரோல் வழங்கும் நடைமுறையும் வருடத்திற்கு ஒரு முறை 15 நாட்கள் அவசரகால அவசரகால 15 நாட்கள் அவசரகால அவசரகால பரோல் வழங்கும் நடைமுறையும் தமிழகத்தில் இருக்கிறது. இந்த வழக்கமான நடைமுறைகள் கூட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுக்கப்படுகின்றன.

மருத்துவம் போன்ற அவசரத் தேவைகளுக்கு கூட அவர்களுக்கு பரோல் மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலை தொடர்ந்து, சிறையில் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் சிறை வாசிகளுக்கு மூன்று மாதம் பரோல் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கின்றது.

எனவே தமிழக அரசு ஜூன் - 3 மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள், முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட ஆயுள் சிறைக்கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், நடைமுறையில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் மூன்று மாத பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பதாகை ஏந்திய போராட்டத்தை இன்று நடத்தியது.


கொரோனா பேரிடர் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தமது வீடுகளில் குடும்பத்துடன் பதாகை ஏந்திய போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


Updated On: 3 Jun 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...