காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும்- வியாபாரிகள்சங்கம் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு ஏற்படும் காவல்துறை நெருக்கடிகளை குறைக்க நடவடிக்கை வேண்டும் இல்லை என்றால் அனைத்து கடைகளையும் அடைக்க உள்ளதாக வியாபாரி சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு விதிக்கும் கட்டுபாடுகள் மற்றும் அபராதம் விதிப்பது குறித்த வியாபார சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது. இன்று திருநெல்வேலி பகுதியில் வணிகர்கள் அரசு கொரோணா தோற்றுக்காக அறிவிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் வணிகம் செய்து வருகிறோம்; இங்கு சில அதிகாரிகள் 200 ரூபாயில் இருந்து 5000 வரை அபராதம் விதிப்போம் என்றும் எண்ணை மற்றும் பழக் கடைகள் திறக்க கூடாது என்று கூறுகிறார்கள்.
ஆனால் நடைபாதை கடைகள் மட்டுமே திறக்க கூடாது என உத்தரவு உள்ளது. இதனைப் புரிந்துகொள்ளாமல் அதிகாரிகள் வியாபாரிகளை சிரமப்படுகின்றனர் அதுபோல கடைக்கு வரும் பொருட்களை ஏற்றுவது இறக்குவது என்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது கடைக்கு வரும் பலசரக்கு சாமான்கள் கடையில் இறக்குவதற்கு இரவு வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இது போன்ற சிரமங்களை எங்களால் வணிகம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது இதனைத்தொடர்ந்து வனிகர்கள் நாங்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்துள்ளோம்.அதிகாரிகளைப் என்று அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் குறைந்தபட்சம் 15 நாட்கள் அல்லது இப்பிரச்சனைகள் முடியும் வரை கடைகளை அடைத்து விடுவோம் என முடிவு செய்துள்ளோம்.
மளிகை காய்கறி பழங்கள் போன்ற பொருட்களை அரசே விநியோகம் செய்து கொள்ளட்டும் என்பது வியாபாரிகளின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது அந்த அளவுக்கு காவல்துறை அதிகாரிகளிடம் புரிந்து கொள்ளாத தன்மை உள்ளது.
இதனால் வணிகம் செய்யவே எங்களுக்கு விருப்பம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது இதை மாவட்ட உயர் அதிகாரிகளுக்கும் எங்கள் சங்க மாநில நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்த உள்ளோம் இதற்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் இல்லை என்றால் கடைகளை அடைத்து விடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்றனர் என மாவட்ட தலைவர் சுப்பைிரமணியன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu