காக்கும்கரங்கள் வாட்ஸ்அப் குழு - உண்மையிலேயே உதவிடும் கரங்கள்தான்.

நெல்லை மேலப்பாளையத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு வாட்ஸ் அப் குழு காவலர் நண்பர்கள் மாநில அளவில் பிரித்த தொகையினை வழங்கினார்கள்.
தமிழ்நாடு காவல்துறையில் 1993-ம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்து தற்போது காவல் உதவி ஆய்வாளர்களாக மாநிலம் முழுவது பணிபுரிந்து வருபவர்கள் சமீபகாலமாக ஒன்றிணைந்து 1993 பேட்ச் காக்கும் கரங்கள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை துவக்கி அதன் மூலம் அக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள அவர்களது பேட்ச் நண்பர்கள் யாரவது உயிரிழந்தால் அவர்களது குடும்பங்களுக்கு குறிப்பாக அவர்களது குழந்தைகளுக்கு உதவும் விதமாக மாநில அளவில் பங்களிப்பு தொகையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் 93 பேட்ச் நண்பர்கள் குழுவில் பிரிக்கப்பட்டு உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 1993 நெல்லை மாநகர காவல் காக்கும் கரங்கள் நண்பர்கள் குழுவின் உறுப்பினரான இளஞ்சிறார் உதவி காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து 19.11.2020 அன்று உடல்நலக் குறைவால் உயிர் நீத்த அஹமது அலி குடும்பத்திற்கு மாநில அளவில் கிடைக்கப்பெற்ற பங்களிப்பு தொகையான ரூ.5,11,000/- வழங்கும் நிகழ்ச்சி மேலப்பாளையத்திலுள்ள அஹமது அலியின் இல்லத்தில் வைத்து அரசின் கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, தங்கம், ரவி, மைதீன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் உதவி ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், சுப்பையா, பாலமுருகன், சங்கரபாண்டியன், மாயாண்டி, கருப்பசாமி பாண்டியன், தட்சணாமூர்த்தி, முத்துராமன் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த சுரேஷ், ரஞ்சித், ரெய்மண்ட், ஸ்டீபன், ஜெயசந்திரன், ஆசிர், கணேசன், ஷம்சுதீன், முருகேசன், சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இவர்களது உதவும் மனப்பான்மையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu