விதிமுறை மீறல்கள் இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை: ஆட்சியர் விஷ்ணு
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கப்பட்ட இடங்களில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யக்கூடிய ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் தேர்தல் கட்டுபாட்டு அறை மற்றும் கட்டணமில்ல தொலைபேசி ஆகியவை செயல்பட்டுவருகிறது. இன்றைய தினம் வரை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் 29 மது பாட்டில்கள், 1.25 லட்சம் ரொக்கபணம் மற்றும் 7.7 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 13441 போஸ்டர்கள், பதாகைகள் என அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குபதிவுக்காக 1924 வாக்குசாவடிகள் தயார் நிலையில் உள்ளது. இதில 309 வாக்குசாவடிகள் பதட்டமானவையாக கண்டறியபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தலுக்காக 3229 வாக்கு இயந்தரங்கள், 2416 வாக்கு பதிவு கட்டுபாட்டு இயந்திரங்கள், 2563 விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை பரிசோதனைகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 157 மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆன்லைனிலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தாயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் நாளில் செய்யப்படவேண்டிய பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu