கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு

கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு
X
உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வார நிகழ்ச்சி, நெல்லையில் வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 7 ம் தேதி முதல் 13ம் தேதி வரை கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் இலவச கண் நீர் அழுத்த கண் நோய் பரிசோதனை, மாணவ,மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரேம்குமார் வரவேற்புரையாற்றினார். ஆப்டோமெட்ரி கல்லூரி மாணவ மாணவியர் சார்பில் நடத்திய கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கண்காட்சியினை திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நன்றியுரையாற்றினார். மேலும் அண்ணா விளையாட்டு அரங்கில் நடை பயிற்சிக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச கண் நீர் அழுத்த கண் பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story