மகன் தற்கொலை: காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க தந்தை மனு

மகன் தற்கொலை: காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க தந்தை மனு
X

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் வயது 66 இவர் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எனக்கு மூன்று மகன் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். எனது இரண்டாவது மகன் ஐயம்பெருமாளுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு பாப்பான்குளம் ஜெயா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

மருமகள் ஜெயாவின் உடன்பிறந்த சகோதரர்கள் முத்துராமலிங்கம், வெங்கடேஷ் ஆகியோர் எனது மருமகளை தூண்டிவிட்டு எனது மகனுடன் நிம்மதியாக அவளை வாழ விடாமல் செய்து வந்தனர். இதனால் எனது மகன் மனதளவில் மிகுந்த பாதிப்பு அடைந்தான். எனது மகன் ஐயம்பெருமாளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்த பின்னரும் மருமகள் ஜெயாவின் சகோதரர்கள் மற்றும் அவரது பெரியப்பா மகன் என மூன்று பேர் இணைந்து எனது மகனை போனில் கொலை மிரட்டல் விடுத்தும், அசிங்கமாக ஏசவும் பொய் வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இதனால் மனமுடைந்த எனது மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விவரம் தெரிந்தும் எனது மருமகள் ஜெயா அவரை காப்பாற்றாமல் சென்று விட்டதால் கடந்த 22ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஐயம்பெருமாள் இறந்தார். எனது மகன்கள் இறப்பிற்கு காரணமான மருமகள் ஜெயா மற்றும் அவரது சகோதரர்கள் 3 பேர் மீது கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அதில் இரண்டு பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே எனது மகன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்