இரட்டை ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
கோவில்பட்டி - கடம்பூர் மற்றும் கங்கைகொண்டான் - திருநெல்வேலி -இடையே 2வது ரயில்வே பாதை பணிகளை 3 நாட்கள் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு.
மதுரை - தூத்துக்குடி வரையிலான 160 மீட்டர் தூரத்திற்கு இரண்டாவது அகல ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சாத்தூர் முதல் தூத்துக்குடி வரை ரூபாய் 445 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தடத்தில் கடம்பூர் முதல் தட்டப்பாறை வரை 33 கிலோமீட்டர் தூரம் பணிகள் முடிவடைந்து, ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி - கடம்பூர் மற்றும் கங்கைகொண்டான் - திருநெல்வேலி ரயில் பிரிவுகளில் இரட்டை அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிகிறது.
இந்த புதிய இரட்டை அகல ரயில் பாதையில் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் பிப்ரவரி 26 அன்று ஆய்வை துவக்க இருக்கிறார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பிப்ரவரி 26 அன்று கோவில்பட்டியிலிருந்து கடம்பூர் வரை புதிய அகல இரட்டை ரயில் பாதையை ஆய்வு செய்கிறார். பிப்ரவரி 27 அன்று கங்கைகொண்டானில் இருந்து திருநெல்வேலி வரை புதிய இரட்டை அகல ரயில் பாதையை மோட்டார் டிராலி மூலமாக ஆய்வு செய்ய இருக்கிறார்.
பிப்ரவரி 28 அன்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள புதிய இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்ய இருக்கிறார். எனவே இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தின் போது அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu