மேலப்பாட்டம் கோவில் விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி

மேலப்பாட்டம் கோவில் விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி
X

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில் மண்டலாபிஷேக 12 ஆம் நாள் சிறப்பு நிகழ்வு திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இ.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். தங்கம் வெள்ளி வைர வியாபாரிகள் சங்க தலைவர் டி.ஏ. கே. எம். கொம்பையா பாண்டியன் முன்னிலை வகித்தார்கள். வந்திருந்தவர்களை திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீதாலட்சுமி வரவேற்றார்கள். திருக்கோயில் வழிபாடுகளை ஆகம,ஆலோசகர். ஆ.ரெங்கநாதன் பட்டாச்சாரியார் சிறப்பாக செயல்படுத்தினார்கள்.

சிறப்பு நிகழ்வாக ஸ்ரீராம் அகடமி மாணவ மாணவியர் பரதநாட்டிய நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கேடிசி நகர் வா உ சி நகர் ஸ்ரீநர்த்தனாலய நாட்டியக் குழுவினர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரத நாட்டியக் கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது . பரிசுகளை சங்கர் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்.ஆ.ரெங்கநாதன், தமிழ் ஆசிரியர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன், ஊர் முக்கிய பிரமுகர்கள், திருமதி அமச்சியார், திருமதி இந்திரா திருப்பணி குழுவைச் சேர்ந்த கோபி,டாக்டர் சீதாலட்சுமி,டி.ஏ.கே.எம்.கொம்பையாபாண்டியன் ஆகியோர் பரிசளித்து,பாராட்டினார். சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags

Next Story