நெல்லை: முதல்வர் வருகையை முன்னிட்டு ஆலோசனை

நெல்லை: முதல்வர் வருகையை முன்னிட்டு ஆலோசனை
X
முதல்வர் வருகையை முன்னிட்டு, நெல்லை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் மற்றும் ராஜலெட்சுமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 18 ஆம் தேதி நெல்லைக்கு வர தர உள்ளார். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், களக்காடு, மேலச்செவல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்க உள்ளார். இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சரும் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.பி உதயகுமார், ஆதித்திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது.

முன்னதாக அமைச்சர் உதயகுமாருக்கு நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா சால்வை அணிவித்து வரவேற்றார், தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், இசக்கி சுப்பையா, ஏகே சீனிவாசன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்கள் ஜெகநாதன் என்ற கணேசன் மற்றும் மைக்கேல் ராயப்பன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார், இளைஞரணி செயலாளர் பால்துரை, விகேபி சங்கர், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பள்ளிகொட்டை செல்லதுரை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil