காவலர்களுக்கான மருத்துவ முகாம்

காவலர்களுக்கான மருத்துவ முகாம்
X

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு விவேகானந்தர் சேவை அறக்கட்டளை அம்பாசமுத்திரமும், நெல்லை ஷிபா மருத்துவமனையும் இணைந்து நடத்திய காவலர்களுக்கான மருத்துவ முகாமை சேரன்மகாதேவி ஏ எஸ் பி பிரதீப் துவக்கி வைத்தார். முகாமில் சேரன்மகாதேவி உட்கோட்டத்தை சேர்ந்த சுத்தமல்லி, முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், பத்தமடை மற்றும் முன்னீர்பள்ளம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு விவேகானந்தா சேவை அறக்கட்டளையின் நிறுவனர் நாகராஜன், நெல்லை ஷிபா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் கஜலட்சுமி பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Next Story