நெல்லை: எஸ்சி எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பு -புதிய நிர்வாகி தேர்வு

நெல்லை: எஸ்சி எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பு -புதிய நிர்வாகி தேர்வு
X

நெல்லையில் மத்திய மாநில அரசு எஸ்சி எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மகாலில் வைத்து மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி தலைமையில் நடைபெற்றது.

மாநில அமைப்பு செயலாளர் எல்ஐசி சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு அறிவித்தபடி இட ஒதுகீட்டினை வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களில் பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, கூட்டத்தின் நிறைவில் சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக அருள் குமார் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Next Story