நெல்லை: தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர்கள் ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் பிரிவு ஆலோசனை கூட்டத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட செயலாளர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜோதி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மற்றும் மாநில பொதுச் செயலாளருமான விடியல் சேகர் கலந்து கொண்டார்.
முன்னதாக நெல்லை தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மூத்த நிர்வாகி ஞான தேசிகன் திரு உருவப் படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு மாணவர்கள் பாடுபடவேண்டும், மாவட்ட அளவில் ஒவ்வொரு பகுதியிலும் மாணவர்களை கட்சியின் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும், பூத் கமிட்டிக்கு திறமைமிக்க, செயல்பாடு உள்ள மாணவர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டும் போன்று கருத்துக்களை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி பேசினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu