நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை பத்ர தீபம்
நெல்லை நெல்லையப்பர் கோவில் தை அமாவாசை பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் தை அமாவசையை முன்னிட்டு ஆண்டு தோறும் 3 நாள் திருவிழாவாக பத்திரதீப திருவிழா நடைபெறும். நெல்லையப்பர் திருக்கோயில் பத்திர தீபத் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.காலையில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாலையில் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள விநாயகர் முன்பு தங்க விளக்கு வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நெல்லையப்பர் சன்னதிக்கு விளக்கு எடுத்து செல்லப்பட்டு சுவாமி முன்னாள் தங்க விளக்கில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மேலதாளங்கள் முழங்க மஹாதீபம் ஏற்றப்பட்ட தங்கவிளக்கு கோவிலை வலம் வந்து சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பீடத்தில் நிறுவப்பட்டது.பின்னர் மணிமண்டபத்தில் தங்கவிளக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தங்க விளக்கின் மஹாதீபத்தில் இருந்து நாளை தை அமாவாசை அன்று சுவாமி கோவில் தங்க கொடிமரம் முன்பு அமைக்கப்படும் நந்தி தீபம் ஏற்றப்படும்.அதனை தொடர்ந்து கோவில் முழுதும் பத்தாயிரம் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.அன்றைய தினம் இரவு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்திலும் 63 நாயன்மார் மரகேடயத்திலும் வீதி உலாவும் நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu