ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திமுக பொங்கல் பரிசு

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திமுக பொங்கல் பரிசு
X
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இராதாபுரம் ஒன்றிய பகுதியிலுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது .

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இராதாபுரம் ஒன்றிய பகுதியிலுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திமுக சார்பில் முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆனைகுடி வீனஸ்வீரஅரசு ஏற்பாட்டில் பொங்கல் பரிசாக இனிப்பும் ரூபாய் 500 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. கோட்டைக்கருங்குளம், சமூகரெங்கபுரம் பகுதியிலுள்ள 70 நபர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜோசப் பெல்சி தலைமை வகித்து பொங்கல் பரிசினை வழங்கினார்.நிகழ்ச்சியில் கோட்டைக்கருங்குளம் கிளைச் செயலாளர் சொக்கலிங்கம்,வடிவம்மன்பட்டி கிளைச் செயலாளர் முத்து,மிட்டார்தார்குளம் கிளைச் செயலாளர் அந்தோணிசெல்வன்,நம்பிகுறிச்சி கிளைச்செயலாளர் கென்னடி,காந்திநகர் சாமி, சமூகரெங்கபுரம் கிளைச் செயலாளர் முரளி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் செங்குட்டுவன்,கட்டனேரி கருணைராஜ், சமூகை வன்னியதாஸ், பாலசுந்தரம், கும்பிகுளம் முனனாள் ஊராட்சிமன்ற தலைவர் ஒன்றிய துணைச் செயலாளர் வேணுகோபால், சீலாத்திகுளம் கிளைச் செயலாளர் ரமேஷ்துரை, தெற்குகள்ளிகுளம் கிளைச் செயலாளர் டெர்மின்ராஜா, சுந்தர், ராஜா, அகாஷ்மிக்கேல், திசையன்விளை முன்னாள் பேரூர் செயலாளர் ஜெயராஜ், நவ்வலடி லிங்கதமிழரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.பொங்கல் பரிசினை பெற்றுக் கொண்ட ஆட்டேி ஓட்டுனர்கள் இராதாபுரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜோசப் பெல்சி ,ஆனைகுடி வீனஸ்வீரஅரசு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story
உங்கள் திறமைககுக்கு உதவியாக அமையும் AI!