நெல்லையில் தேமுதிக சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

நெல்லையில் தேமுதிக  சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
X
தே.மு.தி.க நெல்லை மாவட்ட சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருநெல்வேலி மாநகர் மாவட்ட சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் ஆரோக்கிய அந்தோணி, மாவட்ட பொருளாளர் சண்முகவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாடசாமி, செல்வகுமார், கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநில வர்க்கஅணி செயலாளர் முகமது அலி, பகுதி செயலாளர்கள் மாரிமுத்து, ஜெலிஸ் ரகுமான், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.எஸ். முருகன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் அமுதா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் பணியான பூத் கமிட்டி அமைத்தல், கேப்டன் அறிமுகம் செய்பவரை தேர்தலில் வெற்றிபெற செய்வது குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story
ai in future agriculture