புதிய திட்டம் மக்களுக்கு பாதிப்பு: மின் வாரிய நிதித்துறை இயக்குனர்

புதிய திட்டம் மக்களுக்கு பாதிப்பு: மின் வாரிய நிதித்துறை இயக்குனர்
X
புதிய திட்டத்தால் மக்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் என மின் வாரிய நிதித்துறை இயக்குனர் பேட்டி

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை அடுத்த சுண்டன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். இவர் ஆந்திர மாநில மின்வாரிய நிதி துறை இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தவர் மின்சாரம் என்பது மத்திய மாநில அரசாங்கங்களின் பட்டியலில் இடம் பெறுவதால் மத்திய அரசாங்கம் புதிய மாற்றங்களை செய்ய முன்வந்துள்ளது. இதுவரை மக்களுக்கு மானியத்துடன் அரசே மின்சாரம் வழங்கி வந்ததை மாற்றி மானிய தொகையை அரசு நேரடியாக மக்களுக்கு வழங்கலாம் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது, இதனால் மக்கள் தாங்கள் உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை நேரடியாக மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள், எனவே மாநில அரசு நிர்ணயித்த வந்த மின் கட்டணம் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்வதால் மின் கட்டணம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

மின் கட்டணத்தை பொது மக்கள் கட்ட தவறும் பட்சத்தில் அபராதமும் அல்லது மின் இணைப்பு துண்டிப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. இது ஒட்டு மொத்த மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் இருந்து குறைந்த பட்ச அளவை கண்டிப்பாக கொள்முதல் செய்ய வேண்டும் என நிலை உருவாகும் என அவர் தெரிவித்தார்.

Next Story
ai solutions for small business