நெல்லையில் திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றன

நெல்லையில் திருப்பாவை  திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றன
X
திருப்பாவை மற்றும் திருவெம்பாவைப் பாசுரங்களை பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரைப்போட்டிகளை திருநெல்வேலியில் இந்து சமய அறநிலையத்துறை நடத்தியது

இந்து சமய அறநிலையத்துறையின் திருநெல்வேலி இணை ஆணையர் மண்டலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் மாவட்டத்தில் அமைந்துள்ள, பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு, திருப்பாவை மற்றும் திருவெம்பாவைப் பாசுரங்களை பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரைப்போட்டிகள், மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி ஏற்பாட்டின்படி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் வைத்து

உதவி ஆணையர் சங்கர் முன்னிலை வகித்து போட்டியை துவக்கி வைத்தார்.

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காந்திமதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் நித்யா, முத்துசெல்வி, சுகந்தி, ஆஷாதேவி, கீதா ஆகியோரும், சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரமத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமியும் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர் . போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினர்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் ராமராஜா, கண்காணிப்பாளர் கவிதா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!