நெல்லை ரெயில் நிலையத்தில் ஆய்வு பணி
நெல்லை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் வரும் 27-ந்தேதி தென்னக ரெயில்வே பொது மேலாளர் வருடாந்திர ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளர் . இதனை முன்னிட்டு நெல்லை ரெயில் நிலையத்தில் மதுரைக் கோட்ட மேலாளர் லெனின் ஆய்வு மேற்கொண்டார் . குட்செட், நடைபாதை , தங்கும் அறைகள் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கொரோனா பரவல் காரணமாக ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் தெர்மல்ஸ்கேன், உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்ட பின்னர் , நுழைவு வாயிலிலேயே டிக்கெட்டும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இரட்டை ரெயில்பாதை திட்டத்தைப் பொறுத்தவரை 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டது. தற்போது மதுரை-திருமங்கலம் வரையிலான பணிகள் மட்டும் நடந்து வருகிறது. இரட்டை ரெயில்பாதை பணிகள் நெல்லை வரை வரும் மார்ச் மாத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு இயக்கும் படி கோரிக்கை விடுக்கும் ரெயில்கள் உடனடியாக இயக்கப்படுகிறது. விரைவில் அனைத்து ரெயில்களும் இயக்கப்படும்
என தெரிவித்துள்ளார் . தொடர்ந்து அம்பாசமுத்திரம், செங்கோட்டை ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu