விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
X
நெல்லை மணிமுத்தாறு அணையில் உடனடியாக தண்ணீர் திறக்கவில்லை என்றால் வரும் 4-ந்தேதி நெல்லை வரும் முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என தெரிவித்தனர்.

நெல்லை மணிமுத்தாறு அணையில் இருந்து 1வது மற்றும் 2-வது ரீச்சில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன முறையில் காய்கறி மாலை அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாயப்பணிகளுக்காக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து ஒன்று மற்றும் இரண்டாவது ரீச்சில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரியும், அதுபோன்று மானூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் மதிகெட்டான் கால்வாயை தூர்வாரி மேல்மட்ட கால்வாய் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், பொது செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், மனோகரன், பாக்கியகுமார், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவணுபாண்டியன், வழக்கறிஞர் துரைசெந்தில்குமரன், வட்டார தலைவர் சொர்ணம், மண்டல தலைவர் மாரியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நூதன முறையில் காய்கறி மாலை அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் . முன்னதாக காய்கறி மாலை அணிந்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேர் மட்டுமே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் .

இதுகுறித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில் மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விடவேண்டும் , இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 4-ந்தேதி நெல்லை வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என தெரிவித்துள்ளார் .

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!