நெல்லை மாநகர பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது
நெல்லை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் கலியபெருமாள் மகன் கார்த்திக் மற்றும் நெல்லை டவுன் காவல் பிறை தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் சீனி மாரியப்பன். இவர்கள் இருவரும் சேர்ந்து திருநெல்வேலி மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் பாளை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது நெல்லை மாநகர் மற்றும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களிலும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது.
இவர்கள் நெல்லையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் .நெல்லை மாநரம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதம் அலி குற்றவாளிகளை கண்டுபிடிக்க பல்வேறு யுக்திகளை கடைபிடித்து நீண்ட நாளாக டிமிக்கி கொடுத்து வந்த கொள்ளையர்களை பிடித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu