திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

திண்டிவனம் ராமமூர்த்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் மரணம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

1934 ஆம் ஆண்டு பிறந்த ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 1967, 1971ம் ஆண்டுகளில் எம்எல்ஏவாகவும், 1976 முதல் 1984 வரை எம்எல்சியாகவும் இருந்தார்.

1984 - 1990 வரை அவர் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.

87 வயதான அவர் உடல்நலக் குறைவால் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருடைய உடல் அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story