செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறந்ததால் சேதம் தவிர்ப்பு: மத்தியக் குழு
வெள்ளசேதத்தை ஆய்வு செய்த மத்திய குழுவினர்
மிக்ஜம் புயல் நிவாரணப் பணிகளை தமிழிக அரசு சிறப்பாக மேற்கொண்டதாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்தியக் குழு தலைவர் குணால் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்தியக் குழு குணால் சத்யார்த்தி தெரிவித்ததாவது: புயல் எச்சரிக்கையை அறிந்து அறிவியல்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று உயிரிழப்புகள் ஏற்படாமல் அரசு தடுத்துள்ளது.
உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து விவரங்களை திரட்டியுள்ளோம். விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்தப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யயாத்தி தலைமையில் 6 போ் கொண்ட மத்திய குழுவினா் சென்னைக்கு திங்கள்கிழமை டிச.11 இரவு வந்தனா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனாவை செவ்வாய்க்கிழமை டிச.12 சந்தித்து, பாதிப்பு குறித்து கேட்டறிந்தனா். அதன் பிறகு, குழுவினா் இரண்டு பிரிவாக பிரிந்து வடசென்னை, தென்சென்னை பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனா்.
மிக்ஜம் புயல், வெள்ளப் பாதிப்பு குறித்து மத்திய குழுவினா் 3-ஆம் நாளாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu