தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை
X

பைல் படம்.

அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (20.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (21.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22.03.2023 மற்றும் 23.03.2023: கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

24.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பெலாந்துறை (கடலூர்) 9, அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), தொழுதூர் (கடலூர்) தலா 8, வேப்பூர் (கடலூர்) 7, கீழச்செருவாய் (கடலூர்), கல்லணை (தஞ்சாவூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அகரம் சீகூர் (பெரம்பலூர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 6, தேவக்கோட்டை (சிவகங்கை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), லால்பேட்டை (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), திருவாடானை (ராமநாதபுரம்) தலா 5, ஆரணி (திருவண்ணாமலை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பூடலூர் (தஞ்சாவூர்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), ஏத்தாப்பூர் (சேலம்), தண்டையார்பேட்டை (சென்னை), கடலூர்,, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), காரைக்கால் தலா 4, காட்டுமயிலூர் (கடலூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, திருத்தணி (திருவள்ளூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), லால்குடி (திருச்சி மாவட்டம்), செங்கல்பட்டு, பூண்டி (திருவள்ளூர்), செம்மேடு (விழுப்புரம்), மிமிசல் (புதுக்கோட்டை), வந்தவாசி (திருவண்ணாமலை), முசிறி (திருச்சி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கடவனூர் (கள்ளக்குறிச்சி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), குளித்தலை (கரூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), திருச்சி நகரம்,வீரகனூர் (சேலம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), புலிப்பட்டி (மதுரை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்) தலா 3, அரியலூர், கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), சிவகங்கை, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), நெமூர் (விழுப்புரம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), ஆத்தூர் (சேலம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), திருப்போரூர் (செங்கல்பட்டு), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), லக்கூர் (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), கங்கவல்லி (சேலம்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), சிதம்பரம் (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), பொன்மலை (திருச்சி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பெரம்பலூர், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சமயபுரம் (திருச்சி), கரியகோவில் அணை (சேலம்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), மயிலாடுதுறை, விருதாச்சலம் (கடலூர்), சென்னை நுங்கம்பாக்கம், பெரம்பூர் (சென்னை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), மேலூர் (மதுரை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), காரைக்குடி (சிவகங்கை), ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை) தலா 2, சத்தியார் (மதுரை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கொத்தவாச்சேரி (கடலூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), வடக்குத்து (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), புவனகிரி (கடலூர்), காரையூர் (புதுக்கோட்டை), குறிஞ்சிப்பாடி (கடலூர்), நாகப்பட்டினம், முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), ஆனந்தபுரம் (விழுப்புரம்), எறையூர் (பெரம்பலூர்), பொண்ணை அணை (வேலூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), வளத்தி (விழுப்புரம்), குப்பநத்தம் (கடலூர்), நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), எறையூர் (கள்ளக்குறிச்சி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), மங்களபுரம் (நாமக்கல்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை), புதுச்சேரி, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), நாகுடி (புதுக்கோட்டை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), திருமயம் (புதுக்கோட்டை), சோழிங்கநல்லூர் (சென்னை), திருவள்ளூர், வி.களத்தூர் (பெரம்பலூர்), ஆனைப்பாளையம் (கரூர்), வானூர் (விழுப்புரம்), செஞ்சி (விழுப்புரம்), புழல் ARG (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கிளானிலை (புதுக்கோட்டை), சின்கோனா (கோயம்புத்தூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), வட்டானம் (ராமநாதபுரம்), தரமணி (சென்னை), கோலியனூர் (விழுப்புரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), அம்முண்டி (வேலூர்), தம்மம்பட்டி (சேலம்), திருச்சி விமான நிலையம், மீனம்பாக்கம் ISRO AWS (சென்னை), எம்ஆர்சி நகர் ARG (சென்னை), விருத்தாசலம் Agro (கடலூர்), ஏசிஎஸ் கல்லூரி ARG (காஞ்சிபுரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 1.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா