நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம்: 3 பெண்கள் கைது

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம்: 3 பெண்கள் கைது
X
Tamil Nadu Ministers In Tamil- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Tamil Nadu Ministers In Tamil- ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று முன்தினம் மதுரை விமானநிலையம் வந்தது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் . மதுரை விமான நிலையத்திற்கு சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பியபோது பாஜகவினர் அவரது காரை மறைத்து கோஷங்கள் எழுப்பியதுடன், பெண் ஒருவர் அவரது கார் மீது தனது காலணியை வீசினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.

இது தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணை தலைவர் குமார், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா ,திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா ,முகமது யாகூப் உள்ளிட்ட ஆறு பேர் நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர், இவர்கள் ஆறு பேருக்கும் வருகிற 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை திருமங்கலம் அருகே வாகை குளத்தில் பதுங்கி இருந்த 3 பெண்களை கைது செய்தனர்

பாஜக மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை என்ற 3 பெண்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் தனலஷ்மி என்பவர் தான் அமைச்சரின் கார் மீது காலனி வீசியவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story