திருப்பூரில் மூன்று சிறுவர்கள் பலி; காப்பகம் மூடல்

திருப்பூரில் மூன்று சிறுவர்கள் பலி; காப்பகம் மூடல்
X

தமிழக அரசின் உத்தரவுபடி, திருமுருகன் பூண்டியில், விவேகானந்தா சேவாலயம் காப்பகம் பூட்டி மூடப்பட்டது.

Killed News -திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், விவேகானந்த சேவாலயம் காப்பகம் வருவாய்த் துறையினர் முன்னிலையில், இன்று மூடப்பட்டது.

Killed News - திருப்பூர் அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டியில் விவேகானந்த சேவாலயம் செயல்பட்டது. இந்த காப்பகத்தில், 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசுப் பள்ளியில், கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு, ரசம் சாதம் சாப்பிட்ட சிறுவர்கள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மறுநாள் (6-ம் தேதி) காலை, ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, மாதேஷ், அத்தீஷ் என்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது, மேலும் 12 சிறுவர்கள் மற்றும் ஒரு காவலர் மயக்கம் அடைந்த நிலையிலும் காணப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பாபு என்ற சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், 11 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கலெக்டர் வினீத், செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ சாமிநாதன் ஆகியோர், மருத்துவமனையில் நேரில் ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர். நேற்று சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் தலைமையிலான விசாரணைக்குழு மற்றும் சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையிலான குழுவினர் நேரில் காப்பகத்தில் ஆய்வு நடத்தினர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம், விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், "காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை. காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனப்போக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுகிறது" என்று அறிவித்தார். மேலும் காப்பகத்தில் இருந்த மற்ற சிறுவர்களை, ஈரோடு காப்பகத்துக்கு மாற்றவும், அங்கு அவர்கள் கல்வியை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும். அலட்சியமாக செயல்பட்ட காப்பக நிர்வாகி மீதும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தெரிவித்தார்.

இந்நிலையில், தி.மு.க சார்பில், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையும், தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதைடுத்து இன்று காலை திருப்பூர் கலெக்டர் வினீத் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் உள்ளிட்டார் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவாய் துறையினருக்கு, காப்பகத்தை மூட உத்தரவிட்டனர் . இதனைத் தொடர்ந்து, தாசில்தார் ராஜேஷ் மற்றும் போலீசார் முன்னிலையில் காப்பகத்திற்கு பூட்டு போட்டு மூடப்பட்டது.

திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !