ஒரே இடத்தில் சந்திர உதயமும், சூரிய அஸ்தமனமும் நடக்கும் அபூர்வ காட்சி: பெருமளவில் குவிந்த மக்கள்

ஒரே இடத்தில் சந்திர உதயமும், சூரிய அஸ்தமனமும் நடக்கும் அபூர்வ காட்சி:  பெருமளவில் குவிந்த மக்கள்
X
இந்த காட்சி உலகில் ஆப்பிரிக்க நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தெரியும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் மட்டுமே தெரியும்

உலக புகழ் பெற்ற, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தொடர் விடுமுறை மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடியதால் கன்னியாகுமரி சுற்றுலா தளம் களைகட்டியது. காலை முதலே கன்னியாகுமரியில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் அங்கு அமைந்துள்ள கடற்கரை, சுற்றுலா இடங்கள், சூரிய உதயம், கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றை பார்த்து ரசித்ததோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனிடையே சித்ரா பவுர்ணமி நாளான இன்று அபூர்வ நிகழ்வாக ஒரே இடத்தில் சந்திர உதயமும், சூரிய அஸ்தமனமும் நடக்கும் அபூர்வ காட்சியை காண சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்துள்ளனர். இந்த காட்சி உலகில் ஆப்பிரிக்க நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தெரியும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கோலாகல திரளுடன் நடைபெற்ற விழா