கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: 2.39 லட்சம் பேர் பயனடையும் தூத்துக்குடி மாவட்டம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: 2.39 லட்சம் பேர் பயனடையும் தூத்துக்குடி மாவட்டம்
X
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2.39 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2.39 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை கடந்த 15.09.2023 அன்று தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கலைஞர்; மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 582 மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்ற தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த ரேவதி, அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த கலா உள்ளிட்ட பெண்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா