தூத்துக்குடி மக்கள் களம் நிகழ்ச்சியில் 54 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மக்கள் களம் நிகழ்ச்சியில் 54 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
X

தூத்துக்குடி குராமகிரி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து கனிமொழி எம்.பி. மனுக்களை பெற்றார்.

தூத்துக்குடி மக்கள் களம் நிகழ்ச்சிகளில் 54 பயனாளிகளுக்கு ரூ. 35.62 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம், அல்லிக்குளம், கூட்டுடன்காடு மற்றும் குமாரகிரி ஆகிய ஊராட்சிகளில் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி முன்னிலையில் பல்வேறு துறைகள் மூலமாக பட்டா மாறுதல் உத்தரவு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான தனிநபர் கடன், வேளாண்மை இடுபொருட்கள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ. 35.62 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

திம்மராஜபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.


பேரூரணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், ரூ. 22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திம்மராஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினையும் கனிமொழி எம்.பி. திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆஸ்கர், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business