வ உ சிதம்பரனார் துறைமுகம் ரூ.860 கோடியில் 13 சாகர் மாலா திட்டங்களை நிறைவேற்றியது

2022 மார்ச் மாதம் வரை வ உ சிதம்பரனார் துறைமுகம் ரூ.860 கோடி செலவில் 13 சாகர் மாலா திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது. மேலும், துறைமுகத்தின் திறனை ஆண்டொன்றுக்கு 40.80 மில்லியன் மெட்ரிக் டன் என விரிவுபடுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வ உ சி துறைமுக ஆணையத்தின் தலைவர் டி கே ராமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.
கடலோர சரக்குகள் இறக்கும், ஏற்றும் தளம் தற்போதுள்ள நிலக்கரி துணை துறைமுகத்தை மேம்படுத்துதல், கடலோர சரக்குகள் ஏற்றி இறக்கும் பகுதியை ஆழப்படுத்துதல், சரக்கு பெட்டக முனையமாக எட்டு தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இந்த திட்டங்களில் அடங்கும் என்று அவர் கூறினார். தற்போது 3 பெரிய சாகர்மாலா திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்றும் ரூ.807 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டங்களின் மூலம் துறைமுகத்தின் திறன் ஆண்டுக்கு 7.2 மில்லியன் மெட்ரிக் டன் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ராமச்சந்திரன் கூறினார். ரூ.7,500 கோடி செலவில் வெளிப்புற துறைமுகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் இடமாக வ உ சி துறைமுகத்தை மாற்றும் திட்டமும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 1 முதல் 4 வரையிலான சரக்குகள் ஏற்றி இறக்கும் தளங்கள் ரூ.2,455 கோடி செலவில் சரக்கு பெட்டக தளங்களாக மாற்றப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu