2021-22 நிதியாண்டில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை

2021-22 நிதியாண்டில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை
X
2021-22 நிதியாண்டில் 34.12 மில்லியன் டன் சரக்குகளையும், 7.81 லட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களையும் கையாண்டுள்ளது

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2021-22 நிதியாண்டில் 34.12 மில்லியன் டன் சரக்குகளையும், 7.81 லட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களையும் கையாண்டுள்ளது

1. கையாளப்பட்ட சரக்குகளின் செயல்திறன்

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கடந்த நிதியாண்டு 2021-22-ல் 34.12 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் கையாளப்பட்ட 31.79 மில்லியன் டன் சரக்குகளை விட 7.33 சதவிகிதம் கூடுதலாகும். இறக்குமதியை பொருத்தவரையில் 24.19 மில்லியன டன்களும் (+7.42%) ஏற்றுமதியை பொருத்தவரையில் 9.45 மில்லியன் டன்களும் (+2.83%) சதவிகிதமும் மற்றும் சரக்கு பரிமாற்றம் 0.48 மில்லியன் டன்களையும் கையாண்டுள்ளது. இந்திய அரசின் மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் போக்குவரத்து துறை அமைச்சகம் 2021-22 நிதியாண்டிற்காக நிர்ணயம் செய்த 34.00 மில்லியன் டன் சரக்குகளை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 30.03.2022 அன்று கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் துறைமுகம் சரக்கு பெட்டகங்கள் கையாளுவதில் 2021-22 நிதியாண்டில் 7.81 லட்சம் டிஇயு-க்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 7.62 டி.இ.யு-க்களை ஒப்பிடுகையில் 2.49% கூடுதலாகும்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்கு கையாளும் செயல்திறனை பொருத்தவரையில் கப்பல்கள் தளத்திற்காக காத்திருக்கும் சராசரி நேரமானது 2021-22 நிதியாண்டில் 11.52 மணி நேரமாகும் (2020-21 நிதியாண்டு 13.44 மணி நேரம்). கப்பல் தளத்தில் கப்பலின் சராசரி உற்பத்தி குறியீடானது 2021-22 நிதியாண்டு 16,811 டன்களாக அதிகரித்துள்ளது (2020-21 நிதியாண்டு 15,696 டன்கள்). வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டில் காற்றாலை, காற்றாலை உதிரிபாகங்கள் மற்றும் பொது சரக்குகளையும் கையாண்டு பல்வேறு சாதனைகளை படைத்தது. குறிப்பாக 81.50 மீட்டர் நீளமுடைய மிகபெரிய காற்றாலை இறகுகளை (Windblade) கையாண்டுள்ளது. 24 மணி நேரத்தில் 57,090 டன்கள் நிலக்கரியையும் 53,604 டன்கள் சுண்ணாம்புகற்களையும் கையாண்டுள்ளது. 93,719 டன்களுடன் கூடிய அதிக பொது சரக்குகளை கொண்ட பெரிய கப்பலை கையாண்டுள்ளது மற்றும் முக்கிய வழித்தடத்தில் பயணிக்க கூடிய 277 மீட்டர் நீளம்ம் கொண்ட மிகப் பெரிய சரக்கு பெட்டக கப்பலை கையாண்டுள்ளது.

2.நிதிநிலை செயல்பாடு (உத்தேசம்)

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2021-22 நிதியாண்டு மொத்த வருவாய் ரூ.636.29 கோடி (2020-21 நிதியாண்டு ரூ.603.21 கோடி) ஆகும். 2021-22 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.340.90 கோடி (2020-21 நிதியாண்டு ரூ.321.62 கோடி) ஆகும். 2021-22 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பிறகு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.130.01 கோடி (2020- 21 நிதியாண்டு ரூ.109.53 கோடி) ஆகும்.

3. திட்டங்கள் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கடந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டுள்ள திட்டங்களான சரக்குபெட்டக கண்காணிக்கும் அமைப்பு ரூ.42 கோடி செலவிலும், 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரியமின் சக்தி ஆலை ரூ.54 லட்சம் செலவிலும் மற்றும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய 6 இ-கார்கள் (e-cars) (ஒப்பந்த அடிப்படையில்) ரூ.2.22 கோடி செலவிலும் வாங்கப்பட்டு துறைமுக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக (Speeds) உணவு, மாட்டு தீவனம், கனிமங்கள், சமையல் எண்ணெய், தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்கு துவங்குவதற்காக சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கியுள்ளது. மேலும் கூடுதலாக சிமெண்ட் கையாளும் முனையம் அமைப்பதற்காக 12.79 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கியுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கப்பல் வந்து செல்லும் நுழைவு வாயிலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், கரி சேமிப்புக் கிடங்கில் அமையப்பெற்று இருக்கும் சாலையினை மேம்படுத்துதல் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் - 3 இயந்திரமயமாக்கல், பொது சரக்குகளை கையாளும் சரக்கு தளம் 9-யினை சரக்குபெட்டக முனையமாக மாற்றுதல், 2.8 மேகாவாட் காற்றாலை மற்றும் 5 மெகாவாட் தரைதள சூரியமின் ஆலை நிறுவுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக வெளிதுறைமுக திட்டத்தின் முதற்கட்டமாக 16மீட்டர் மிதவை ஆழத்துடன் கூடிய இரண்டு சரக்கு பெட்டக முனையங்களும் (1000 மீட்டர் நீளத்துடன் கூடிய தளங்கள்) மற்றும் 100 மெகாவாட் திறன் கொண்ட (புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி) காற்றாலை – சூரிய மின் ஆலை அமைவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்காவும் பொது தனியார் கூட்டமைப்புகீழ் அமைக்கப்பட உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் திரு தா.கி. ராமச்சந்தின் இ.ஆ.ப., அவர்கள் கூறுகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளும் அளவு கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டு இருந்த வர்த்தக வீழ்ச்சி தற்போது சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது என்று கூறினார். மேலும் இச்சிறப்புமிக்க சாதனையை உரிய அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், சரக்கு பெட்டக முனையங்கள், துறைமுக உபயுாகிப்பாளர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார். மேற்கண்ட தகவலை வ உ சிதம்பரனார் துறைமுக ஆணை ஆணையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளளது.

Tags

Next Story