தூத்துக்குடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
X
சங்கரலிங்கபுரம் அருகே பெண்ணிடம் தகராறு செய்து, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரலிங்கபுரம் அருகே பெண்ணிடம் தகராறு செய்து அவதூறாக பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம், வன்னிகுளம் காலனி பகுதியை சேர்ந்த மருதப்பன் மகன் காளிமுத்து (37) என்பவர் கடந்த 29.09.2021 அன்று குடிபோதையில் தனது வீட்டின் அருகில் இருக்கும் முத்துலட்சுமி என்பவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

இதன் காரணமாக காளிமுத்துவின் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருக்கும் லட்சுமணன் மனைவி சந்தனமாரியம்மாள் என்பவரும், அப்பகுதியில் உள்ளவர்களும் சேர்ந்து காளிமுத்துவை சத்தம் போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து இன்று காலை சந்தனமாரியம்மாளிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சந்தன மாரியம்மாள் அளித்த புகாரின் பெயரில் சங்கரலிங்கபுரம் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்