வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது: 10 பவுன் தங்க நகைகள் மீட்பு

வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது: 10 பவுன் தங்க நகைகள் மீட்பு
X

தூத்துக்குடி அருகே பூசனூர் பகுதியில் வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது. அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி அருகே பூசனூர் பகுதியில் வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது. ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள் மீட்பு.

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசனூர் பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசனூர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மற்றும் அவரது மனைவி குருலட்சுமி ஆகிய இருவரும் கடந்த 18.12.2021 அன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்காக சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்க்கும் போது பீரோவின் உள்அறை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 9 ¾ பவுண் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாடசாமியின் மனைவி குருலட்சுமி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம், குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரேசன், தலைமைக் காவலர்கள் வடிவேல், செல்வகிருஷ்ணன் மற்றும் முதல் நிலை பெண் காவலர் முருகலெட்சுமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (24), க/பெ. மாரீஸ்வரன், பூசனூர் என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் குருலட்சுமி மற்றும் அவரது கணவர் தினமும் வேலைக்குச் செல்லும்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்திருக்கும் இடத்தை அறிந்து வைத்துள்ளதும், வழக்கம் போல் கடந்த 18.12.2021 அன்று குருலட்சுமியும் அவரது கணவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்த போது வீட்டை சாவியால் திறந்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்து பீரோவின் உள்அறையை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படையினர் மாரீஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 9 ¾ பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!