/* */

மிளகாய் பயிருக்கான காப்பீட்டுத் தொகை வழங்குவதில் விளாத்திக்குளம் ஒன்றியம் புறக்கணிப்பு..

மிளகாய் பயிருக்கான காப்பீட்டுத் தொகை வழங்குவதில் விளாத்திக்குளம் ஒன்றியத்தை பயிர் காப்பீட்டு நிறுவனம் முழுமையாக புறக்கணித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

மிளகாய் பயிருக்கான காப்பீட்டுத் தொகை வழங்குவதில் விளாத்திக்குளம் ஒன்றியம் புறக்கணிப்பு..
X

விளாத்திக்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டாரத்தில் அதிகளவு மிளகாய் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால், அதிக மழை மற்றும் வறட்சி காரணமாக மிளகாய் பயிர்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதும் உண்டு. இந்த நிலையில், கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கனமழையில் அனைத்து பயிர்களும் சேதமடைந்த நிலையில் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராபி பருவ வேளாண் பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், தோட்டக்கலை பயிரான மிளகாய் பயிருக்கு நீண்ட இழுபறிக்கு பின் தற்போது விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், புதூர், காடல்குடி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட வருவாய் கிராம விவசாயிகளுக்கு மட்டுமே இதுவரை காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விளாத்திக்குளம் ஒன்றியத்திற்குள்பட்ட விளாத்திக்குளம், வேம்பார், குளத்தூர், சிவஞானபுரம், படர்ந்தபுளி உள்ளிட்ட ஒன்றியம் முழுவதும் முழுமையாக விடுபட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விளாத்திக்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், தோட்டக்கலை துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும் இன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராகவன், விளாத்திகுளம் தாலுகா தலைவர் ராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு பிறகு வட்டாட்சியர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.

போராட்டம் குறித்து, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் கூறியதாவது:

கடந்த 2020-21 ஆம் ஆண்டுக்கான மிளகாய் பயிர் காப்பீடு விவகாரத்தில் புதூர், காடல்குடி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட வருவாய் கிராம விவசாயிகளுக்கு மட்டுமே இதுவரை காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. விளாத்திக்குளம் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகள் முழுமையாக விடுபட்டுள்ளது.

குறிப்பாக, இப்கோ-டோக்கியா என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி அதிகமாக மிளகாய் பயிரிடும் பகுதிகளை புறக்கணித்துள்ளது. சராசரி என்ற பெயரில் விவசாயிகளை வஞ்சிக்காமல் மிளகாய் பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் 2020-21 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நடப்பு பருவத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பதிலாக தமிழக அரசே காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும். விளாத்திகுளம், வேம்பார், சிவஞானபுரம், படர்ந்தபுளி, குளத்தூர் உள்ளிட்ட விளாத்திக்குளம் ஒன்றியம் முழுமைக்கும் மிளகாய் பயிருக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என புவிராஜ் தெரிவித்தார்.

Updated On: 1 Dec 2022 11:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...