அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன்அறை:கனிமொழி எம்.பி திறப்பு
விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.40 இலட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறையினை கனிமொழி எம்பி திறந்து வைத்து பார்வையிட்டார்
விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.40 இலட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறையினை கனிமொழி எம்பி திறந்து வைத்து பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிணடர் மற்றும் பிராணவாயு அறை திறப்பு விழா இன்று (19.8.2021) மாவட்ட ஆட்சியர் செந்திராஜ், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிணடர் மற்றும் பிராணவாயு அறையினை திறந்து வைத்து, பார்iவிட்டார்கள். அதனை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார். விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் ஏகம் பவுண்டேசன் சமூக பொறுப்பு நிதியின் மூலம் ரூ.38 இலட்சம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட நிதி ரூ.4.09 இலட்சம் மூலம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு பிராணவாயு கூடம், 60 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் (16+ 6) டி- டைப் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 60 படுக்கைகளுக்கான Suction System >Alarm System உள்நோயாளிகள் பிரிவில் ஒவ்வொரு தளத்திலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு 6 கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக, ஒரு புற தாலுகா மருத்துவமனைக்கு மையப்படுத்தப்பட்ட 02 சப்ளை, உறிஞ்சும் குழாய், ICU கட்டில்கள் அர்ப்பணிக்கப்பட்டு, கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகள் 8x8 பன்மடங்கு டி- வகை இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆக்சிஜன் சிலிண்டரும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 22 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. புரோடெக் மென்பொருளால் நிதியளிக்கப்பட்ட ரூ.40 லட்சத்தில் காளீஸ்வரி சுத்திகரிப்பு நிலையங்கள் சிஎஸ்ஆர் ஈ காம் அடித்தளத்தின் வழியாக வழிநடத்தப்பட்டது.
ஈசிஜி, எக்ஸ்ரே, இரத்த தானியக்க பகுப்பாய்வு, ஆர்ஓ ஆலை, வரவேற்பு மையம் மற்றும் கோவிட் சிகிச்சைக்கான மற்ற அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புறப்பகுதியில் இருந்து கோவிட் நோயாளிகளுக்கு சிறந்த மற்றும் விரைவான சிகிச்சையை உறுதி செய்யும், மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும், கோவிட் நோயாளிகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கும் என பேசினார்.
இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) முருகவேல், விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மு.மகாலெட்சுமி, சித்த மருத்துவர் மா.தமிழ் அமுதன், குழந்தைகள் நல மருத்துவர் ஆர்.எஸ்.திவ்யா, முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu