வேப்பலோடை பகுதியில் 39 ஆடுகள் திருடியவர் கைது!

வேப்பலோடை பகுதியில் 39 ஆடுகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பலோடை கிராமத்தில் 39 ஆடுகளை திருடியவர் கைது செய்யப்பட்டார். திருடுபோன ஆடுகள் மீட்கப்பட்டன.

துாத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் இன்று தங்களுக்கு சொந்தமான ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். இதில் 39 ஆடுகள் காணாமல் போய் விட்டன. உரிமையாளர்கள் அங்குள்ள பகுதிகளில் தேடி வந்தனர். அப்போது நாகலாபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் (40) என்பவர் வீரபாண்டியாபுரம் கண்மாய் அருகே ஆடுகளுடன் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே ஆடுகளின் உரிமையாளர்கள் முருகனை பிடித்து தருவைக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் முருகனை கைது செய்து திருடிய 39 ஆடுகளையும் மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!