/* */

டாஸ்மாக் ஊழியரிடம் 6.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் 6.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், ஓரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 6,13,220/- பணத்தை கொள்ளையடித்த எதிரிகள் 2 பேர் கைது. கொள்ளையடிக்கப்பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஓரு காரும் தனிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் முருகன் (51). இவர் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதியன்று மது விற்ற ரூபாய் 6,13,220/- பணத்தை கீழ வைப்பாற்றில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் முருகனை பின் தொடர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன், தலைமை காவலர் வடிவேல், முதல் நிலை காவலர்கள் செல்வகுமார், முத்துசேகர் மற்றும் ராசைய்யா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்டையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதிலும், அறிவியல் பூர்வமாக சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததின் மூலமும் மதுரை, முடக்கு சாலை இந்திரா ராணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணன் மகன் பாரத் (22), மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் முத்து இருள் (29) மற்றும் தூத்துக்குடி மில்லர்புரம் வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் என்ற சுருட்டைமணி (23) ஆகியோர் டாஸ்மாக் ஊழியரான முருகனிடம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் எதிரிகளில் ஒருவரான முத்துஇருள் மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி எதிரிகளான பாரத் மற்றும் மணிகண்டன் என்ற சுருட்டைமணி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் விவேகமாகவும், விரைந்தும் செயல்பட்டு, எதிரிகளை கண்டு பிடித்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Updated On: 26 April 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு