கொரோனா ஊரடங்கு பொது போக்குவரத்து தடையால் கரி மூட்டம் தொழில் பாதிப்பு : ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவிப்பு

கொரோனா ஊரடங்கு பொது போக்குவரத்து தடையால் கரி மூட்டம் தொழில் பாதிப்பு : ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவிப்பு
X

தூத்துக்குடி பகுதிகளில் தயாரிக்கப்படும் கரிமூட்ட தொழிலில் ஈடுபட்ட மக்கள் 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக சீமை கருவேல மரக்கரி கொண்டு சொல்வதில் போக்குவரத்து தடையால் கரி மூட்ட தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக சீமைக்கருவேல மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் கரிமூட்ட தொழில்களில் ஏராளமான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் கரி தமிழகம் மட்டுமின்றி, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பட்டு வருகிறது.

தரிசு நிலங்களில் காணப்படும் சீமைக் கருவேலமரங்களை ரூ.30 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கி அதை வெட்டி மூட்டம் அடிக்கி, பின்பு அதை எரித்து பக்குவப்படுத்தி, கரி உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு கரி மூட்டம் உற்பத்திக்கு 3 மாதம் ஆகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கரி தேக்கமடைந்து, அதனை நம்பி இருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தற்போதும் முழு ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொழிற்சாலைகள் செயல்படவில்லை, அவ்வாறு செயல்பட்டாலும் 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு செயல்பட்டு வருவதால் கரி தேவைகள் குறைவாக உள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து தடைபட்டு உள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட கரியை கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதால் வியாபாரிகள் கரி வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

பல லட்ச ரூபாய் செலவு செய்து உற்பத்தி செய்யப்பட்ட கரி செல்லாமல் முடங்கிக் கிடப்பதால், கரி மூட்டம் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், அதனை நம்பி இருக்கக்கூடிய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரி மூட்ட தொழில் செய்வதற்கு வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலே கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story