/* */

விளாத்திக்குளத்தில் மறுகால் வசதி இல்லாததால் 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே மறுகால் வசதி இல்லாததால் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

விளாத்திக்குளத்தில் மறுகால் வசதி இல்லாததால் 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..
X

விளாத்திக்குளம் அருகே நீரில் மூழ்க்கிய பயிர்கள்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள விருசம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாமுநைனார்புரம் கிராமத்தில் பஞ்சாயத்துக்கு சொந்தமான குட்டையில் மறுகால் வசதி செய்து தரப்படாமல் உள்ளது. இதனால், விவசாய நிலங்கள் அருகே உள்ள வாறுகாலில் இருந்து வரும் மழைநீரானது வெளியே செல்ல வழியின்றி, விவசாய நிலங்களிலும், வாறுகாலிலும் குளம்போல தேங்கி காணப்படுகிறது.


இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மிளகாய் செடிகள் உட்பட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி அழிந்து சேதமாகி உள்ளன. மேலும், விவசாயிகள் விதைத்தல், வேலை ஆட்கள் கூலி, உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் என ரூ. 30,000 வரை செலவு செய்து பேணி பாதுகாத்து வந்த பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கியதைக் கண்டு பெரும் சோகத்தில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்வதற்கே வாறுகாலில் ஓடும் மார்பளவு தண்ணீரில் நீந்தித்தான் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்த வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இது போன்ற நிலையை சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, விளாத்திக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு என பல தரப்பிலும் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தாங்கள் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில், மழைநீர் செல்ல மறுகால் அமைத்து தராமல் வெறுமனே சரிசெய்து தருகிறோம் என்று மட்டுமே அதிகாரிகள் கூறி விட்டு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் ஆண்டுதோறும் இது போன்ற இன்னலுக்கு ஆளாகி மேலும் கடனாளியாகி வருவதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

எனவே, தங்கள் பகுதியில் வாறுகாலில் இருந்து செல்லும் உபரி நீர் விவசாய நிலங்களில் தேங்காதவாறு வெளியேற மறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே 50 ஏக்கர் விவசாய நிலத்தையும் அந்த நிலத்தை நம்பி இருக்கும் விவசாயிகளையும் பாதுகாக்க முடியும் என்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தனி கவனம் எடுத்து துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மழைநீர் தேங்காதவாறு மறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 7 Dec 2022 2:52 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  2. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  3. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  7. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  8. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்